17 Jul 2022

மரமன்றோ எல்லாம்

மரமன்றோ எல்லாம்

எவ்வளவு இலைகள் கொட்டுகின்றன

வெட்டி விட்டால் தேவலாம் என்றால்

நிழலுக்கு எங்கே போவது

ஒரு செட்டைப் போட்டுக் கொள்ளலாம் என்கிறார்கள்

செட்டைப் பிரித்து விற்றால்

மரம் போல விலை போகுமா

சமீபமாய் ஒரு மஞ்சள் துணி கட்டியதும்

வந்து போவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது

ஒரு நல்ல நாள் பார்த்து உண்டியல் வைத்து விட்டால்

வருமானமும் கணிசமாக இருக்கும்

நாளானால் கூட்டுவதற்கு ஆள் வருவார்கள்

செட் போட்டுத் தரக் கூட ஆள் கிடைப்பார்கள்

வீட்டுக்கொரு மரம் வளர்க்க வேண்டும்

ஏனென்று தெரிகிறதா

நான்கு மரங்கள் நின்றிருந்தால்

எந்த மரமும் சாமியாகாது

மரங்களை வெட்டக் கூடாது புரிகிறதா

இருக்கின்ற ஒன்றையும் வெட்டி விட்டால்

இன்னொன்றை நட்டு வளர்ப்பதற்குள்

நான்கு காம்ப்ளக்ஸ் கட்டி விடுவார்கள்

சாமிக்கு வரும் வருமானம் ஆசாமிக்குப் போய் விடும்

யாரும் சட்டென மரத்தடி சாமியாராக முடியாது

எதற்கும் பார்த்துச் செய்யுங்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...