18 Jul 2022

இன்று பாக்கெட்டில் இருக்கும் பைசாவுக்குச் சேதாரமில்லை

இன்று பாக்கெட்டில் இருக்கும் பைசாவுக்குச் சேதாரமில்லை

இன்று தள்ளுவண்டிக்காரன் வரவில்லை

குழந்தைகள் எதிர்பார்த்து ஏமாந்து விட்டார்கள்

அகத்திருக்கும் இல்லாளும்தான் ஏமாந்து போனாள்

இன்று பாக்கெட்டிலிருக்கும் பைசாவுக்குச் சேதாரமில்லை என்று

நான் நெஞ்சை ஒரு முறை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன்

*****

No comments:

Post a Comment