6 Jul 2022

கல்லெறி குளம்

கல்லெறி குளம்

ஏன் குளத்தைப் பார்த்தால்

கல்லெறிகிறார்கள்

மனிதர்களைப் பார்த்து எறிய முடியுமா என்ன

எந்த மனிதர் பொறுத்துக் கொள்வார்

குளம் அகிம்சாவாதி

எவ்வளவு கல்லெறிந்தாலும் பொறுத்துக் கொள்ளும்

பரவாயில்லை குளத்தில் கல்லெறிவதோடு

நிறுத்திக் கொள்வது

குளத்தில் கட்டங்களை எறிந்தவர்கள்

பஸ் ஸ்டாண்டுகளை எறிந்தவர்கள்

குப்பை மேட்டை எறிந்தவர்கள்

நிறைய இருக்கிறார்கள்

அது சரி கல்லெறிய குளம் இருக்கிறதா உங்கள் ஊரில்

எங்கள் ஊரில் சாக்கடையைக் கலந்து விடவும்

கொசுக்களை உற்பத்தி செய்யவும் குளமிருக்கிறது

கல்லெறிய குளம் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்

அதிர்ஷ்ட குளத்தில் கல்லெறிந்து சந்தோஷம் பெறுங்கள்

தகவல் சொன்னால் கற்களைப் பொறுக்கிக் கொண்டு

நானும் வருகிறேன்

எல்லாரும் சேர்ந்து கல்லெறிவோம்

கல்லெறிய நாமறிந்து குளமிருக்கிறதே

கல்லெறிந்து கொண்டாடுவோம்

அலைகளை எழுப்பி கை தட்டுமாமே குளம்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...