13 Jul 2022

நாம் செய்திகளை உருவாக்கும் விதம்

நாம் செய்திகளை உருவாக்கும் விதம்

சாவை வெறுக்கலாம்

குண்டுகள் வீசுவதைக் கண்டிக்கலாம்

வன்முறைகள் வேண்டாமென

கவிக்குரிசில்கள் சீறலாம்

மண்டையைப் போடும் நாள் வரை

சண்டையிட்டுத் திரிய வேண்டுமா எனத்

தத்துவப் பாடல்கள் பிறக்கலாம்

எவ்வளவு நேரம்தான்

சத்தம் சிறிதும் இல்லாமல்

அமைதி அமைதி என்று கத்திக் கொண்டிருக்க முடியும்

நான்கு பேர் செத்தால்தான்

நமக்குச் செய்தி கிடைக்கிறது

ஒரு போர் நடந்தால்தான்

ஆயுதங்களைப் பரிசோதிக்க முடிகிறது

நம் மனிதநேசம்

ஆட்டு வளர்ப்பைப் போன்றது

அவ்வளவு அன்பைக் கொட்டித்தான் வளர்க்கிறோம்

ஆடுகளைக் கசாப்புக் கடைகளுக்கு அனுப்பும் வரை

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...