11 Jul 2022

டாட்டா சொல்ல யாருமில்லாத போது

டாட்டா சொல்ல யாருமில்லாத போது

யாருக்கு நான் டாட்டா சொல்வது

டாட்டா சொல்ல யாருமில்லாத போது

மரங்கள் கிளைகளை அசைக்கின்றன

இலைகளைக் கைகள் போல் ஆட்டுகின்றன

பறவைகள் சிறகுகளை அசைக்கின்றன

தூசுக்கள் அசைப்பது போலப் பறக்கின்றன

புகையின் வளைவு நெளிவில் ஏனோ

அச்சு அசல் அசைப்பின் தோற்றம்

எப்போது சில நேரங்களில்

யாருக்கோ டாட்டா சொல்லும்

குழந்தையின் டாட்டா

எனக்கும் கொஞ்சம் சிந்தி விடுகிறது

நான்தான் பொறுக்கி எடுத்துக் கொள்ள

நேரமில்லாமல் பறந்து கொண்டிருக்கிறேன்

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்

யாரும் எனக்கு டாட்டா சொல்வதில்லை

என்று வருந்தும் நான்

எனக்கு நானே கூட டாட்டா சொல்லிக் கொள்வதில்லை

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...