19 Jul 2022

நேரம் அங்கோ இங்கோ எங்கோ இருக்கிறது

நேரம் அங்கோ இங்கோ எங்கோ இருக்கிறது

கொழுப்பெடுத்தவள் என்ற போது

நல்ல கொழுப்பைச் சொன்னாரா

கெட்ட கொழுப்பைச் சொன்னாரா

சுகர் அதிகமாக இருப்பதாகச் சொல்பவர்

தேநீருக்கு இனிப்பு பற்றவில்லை என்றால்

கொடுக்கவா போகிறார்

ஆஞ்சியோ செய்து ஒரு வாரம் ஆகப் போகிறது

என்பவர் நாக்கு செத்துப் போய் விட்டதாகச் சொல்லி

அரை பிளேட் சிக்கனையும் அரை பிளேட் மட்டனையும்

பாடைக் கட்டிக் கொண்டு வரச் சொல்கிறார்

மாத்திரை மருந்துகளில்தான் ஓடுகிறது என்கிறார்

குண்டான் சோற்றை ஒரு கட்டு கட்டிக் கொண்டு

எங்கே தம்பி நேரமிருக்கிறது என்று சொல்லியபடி

நடைபயிற்சிக்கு நேரமில்லாத மாமா சீட்டாடுகிறார்

மாமி சீரியஸாகச் சீரியல் பார்க்கிறார்

வாடகைப் பணம் நான்காயிரம் வந்ததும்

புல் பாடி செக்கப் செய்யப் போவதாகச் சொல்கிறார் ஓனர்

இவர்களில் யார் யாரைச் சந்தித்தாலும்

நல்லா இருக்கீங்களா என்று கேட்டுக் கொள்ளும்

சம்பிரதாயத்தை மட்டும் இன்னும் மாற்ற வில்லை

சும்மா கேட்பதில் காசுக்கென்ன பஞ்சம் வந்து விடப் போகிறது

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...