7 Jul 2022

தண்டனைகள் வீணாகக் கூடாது

தண்டனைகள் வீணாகக் கூடாது

அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா என்கிறார்கள்

செருப்பால் அடிப்பேன் என்கிறார்கள்

மானம் வெட்கம் ரோசமில்லையா என்கிறார்கள்

சோற்றில் உப்பிட்டுச் சாப்பிடாததைப் போலப் பேசுகிறார்கள்

காவல் நிலையத்தில் புகாரளித்து

வாரா வாரத்துக்குக் கையெழுத்து இட வைத்து விடுகிறார்கள்

அண்ணன் தம்பிகளை விட்டு

அடிப்பவர்களும் இருக்கிறார்கள்

ரௌடிகளை விட்டுத் தாக்குபவர்களும் இருக்கிறார்கள்

தெருவே திரண்டு வந்து

மரத்தில் கட்டி வைத்து

உரித்து எடுப்பவர்களும் இருக்கிறார்கள்

காறித் துப்புபவர்கள் சிறுநீர் கழிப்பவர்களும் இருக்கிறார்கள்

அச்சச்சோ

ஒரு காமாந்தகனாக வாழ்வதுதான் எவ்வளவு கஷ்டம்

அதிர்ஷ்டவசமாக

காமாந்தகனை நேசித்துத் திருத்தி விடும் பெண்களும் இருக்கிறார்கள்

எல்லா காமாந்தகர்களுக்கு அப்படி வாய்த்து விடுமா என்ன

காமாந்தகர்களாக இல்லாமல் இருப்பது நல்லது என்றால்

சொல்வது கேட்டுத் திருந்தி விட்டால்

அவ்வளவையும் செய்து ரசிக்க

உங்களுக்கும் வாய்ப்பற்றுப் போய் விடும்தானே

உருவாக்கி வைத்திருக்கும் தண்டனைகளை நாம்தான் என்ன செய்வது

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...