18 Jul 2022

அலையுதிர் காலம்

அலையுதிர் காலம்

உன் விலாசம் தேடி

ஒரு காலத்தில் அப்படி அலைந்திருக்கிறேன்

நீ செல்லும் அத்தனை இடங்களும் அத்துபடி

ஒரு நாள் விடாது செல்லும் இடமெல்லாம்

நிழல் போலவோ நாயைப் போலவோ

எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை

அப்படிப் பின் தொடர்ந்திருக்கிறேன்

நீ சிந்திப் போகும் பூக்களை

உனக்குத் தெரியாமல் குப்பைத் தொட்டி சேராது

வாசம் சோராது காத்திருக்கிறேன்

உனக்கென்ன தெரியும்

நீ வீசி எறியும் நாப்கின்களைத் தேடி அலைந்திருக்கிறேன்

காலம் ஓடி விட்டது

அண்மையில் உன் விலாசம் சொன்னான் ஒருவன்

தெரிந்த இடம்தான்

விசாரிக்காமல் வந்து விடுவேன்

கால் நோவாக இருக்கிறது

அத்துடன் உனக்கு இரண்டு பிள்ளைகள்

ஆஜானுபாகுவாக இருப்பதாகக் கேள்விப் பட்டேன்

என் வாழ்த்துகளை விலாசம் சொன்னவனிடமே

சொல்லி அனுப்பி விட்டேன்

நேரம் இருந்தால் வாழ்த்துகள் கிடைத்த செய்தியை

கொஞ்சம் அலைந்து சொல்லி விட்டுப் போ

உனக்காக நான் அலைந்த அலைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...