15 Jul 2022

காருண்யம் தெரிந்த மனிதர்கள்

காருண்யம் தெரிந்த மனிதர்கள்

சுற்றி சுற்றிக் கொட்டுகிறார்கள்

குப்பைத் தொட்டியில் கொட்ட அவ்வளவு பயம்

கேட்டால் குப்பைத் தொட்டி

ஓர் அடையாளம் மட்டும் என்கிறார்கள்

நல்லவேளை குறியீடு என்று சொல்லாமல் விட்டார்கள்

குப்பைத் தொட்டிக்குள் இருப்பது குறித்து

ஓர் ஆராய்ச்சி செய்யலாம்

அவ்வளவு விவரங்கள் தகவல்கள் இருக்கின்றன

தெருநாய்களின் குட்டிகள் சில நாளும்

வீட்டுக்காரர்களை நம்பாத

வீட்டுப் பூனைகளின் குட்டிகள் சில நாளும்

மனித நாய்களோ மனிதப் பூனைகளோ

எப்படிச் சொல்வதென்று தெரியாது போனாலும்

அவர்களின் பிள்ளைகள் சில நாளும் கிடக்கின்றன

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடாமல்

தொட்டி சுற்றிப் போடுவதற்கு

காரணங்கள் இருக்கின்றன

காருண்யம் தெரிந்த மனிதர்கள் வேறென்ன செய்வார்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...