5 Jul 2022

நல்ல வண்ணம் வாழ சில குறிப்புகள்

நல்ல வண்ணம் வாழ சில குறிப்புகள்

ஏன் அழ வேண்டும்

கண்களில் கோர்த்துக் கொண்ட நீர்

வெளியேறுவது எப்படி

காலில் விழுவதால் தவறொன்றும் இல்லை

அன்றொரு நாள் உடற்பயிற்சிக்கு உத்திரவாதம்

கண்டபடி ஏசுவதைப் பொருட்படுத்த வேண்டாம்

ஒருவரின் மனபாரம் அப்படியாவது இறங்கட்டும்

காறித் துப்புவதால் ஒன்றும் கெட்டு விடாது

சளியைத் துப்பித் தொலைவதற்கு வாய்ப்பு உண்டாகட்டும்

செருப்படி என்றால்

அதன் பலத்தைச் சோதித்தறிய ஒரு சம்பவம்

விளக்குமாறு என்றாலும் பிரச்சனையில்லை

கடைக்காரருக்கு புது விளக்குமாறு போனியாகட்டும்

அவமானங்கள் அத்தனையும் உரங்கள்

உரமிடுபவருக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

சந்தோஷமாய்த் தூங்குங்கள்

அசிங்கத்தை நினைக்காது சிரியுங்கள்

காலையில் எழுந்ததும் மலம் கழித்தாக வேண்டும்

பாவம்தான் டாக்டர்

டாக்டர் செலவு மிச்சமாகி விடுவதால்

அவரிடம் மட்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள்

மற்றபடி என்ன இருக்கிறது

மண்ணில் பூமியில் ஊரில் உலகத்தில் நல்ல வண்ணம் வாழ

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...