3 Jul 2022

‘ரே’யுக்கு நன்றி

 ‘ரே’யுக்கு நன்றி

பேருந்து வந்தால்

இறங்குகிறார்கள் ஏறுகிறார்கள்

ஏறி இறங்கும் விளையாட்டு

முடிவுக்கு வந்ததும்

வண்டியை ஓட்டிக் கொண்டு

ஓட்டுநர் கிளம்புகிறார்

டுர் டுர் என்ற பேருந்தை ஒப்புவிக்க செய்தபடி

நிறுத்துங்கள் என்று காட்டுச் சத்தம் போட்டாலும்

ஓட்டிக் கொண்டுச் செல்பவர்

விசில் சத்தத்துக்கு

வண்டியை நிறுத்துகிறார்

மறுபடியும் ஏறுகிறார்கள் இறங்குகிறார்கள்

விசில் சத்தம் கேட்டால்

டுர் டுர் சத்தம் போடும்படி பேருந்திடம் சொல்கிறார்

எனக்கான நிறுத்தம் வந்ததும்

நடத்துநரிடம் விசில் கேட்டேன்

எதற்கென்றார்

விசில் எடுத்து வர மறந்து விட்டேன்

பேருந்தை நிறுத்துவதெப்படி என்றேன்

ரே என்கிறார்

பேருந்து நிற்கிறது

அடச் சீ இது தெரியாமல்

நடத்துநரிடம் விசில் கேட்டோமே என்றாகி விட்டது

நன்றி ‘ரே’

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...