உலகின் பிரசவம்
உலகம் பிறந்தது யாருக்காக
அது சரி பிறந்தது என்றால்
பிரசவித்தது யார் என்று கேட்டு
விடாதே
உலகின் அப்பனையும் அம்மையையும்
அறிந்தவர் யார்
உலகத்தைதான் முழுதாக அறிந்தவர்
யார்
பிறந்ததிலிருந்தோ பிறந்ததற்கு
பிற்பாடோ
எப்போதிலிருந்தோ சுழன்று
கொண்டிருக்கிறது உலகம்
ஏன் சுழல வேண்டும்
எதற்காகச் சூழல வேண்டும்
மயக்கம் வாராதா உலகிற்கு
என்றால்
மயங்கி மயங்கியும் சுழன்று
கொண்டிருக்கலாம் உலகம்
உலகம் பிறந்தற்குப் பிறகு
உலகில் லட்சம் கோடி உயிர்கள்
பிறந்து விட்டன
மண் கல் மலை கூட பிறப்பிற்குட்பட்டவை
என்று
உலகம் உவந்து கூறலாம்
அல்லது உவப்பை மறைக்கலாம்
உலகம் பிறந்தது பிறந்து விட்டது
அதில் என்னென்னவோ எவ்வளவோ
பிறந்து விட்டன
களைப்பைக் காட்டாமல் உலகம்
சுழன்று கொண்டிருக்கிறது
உலகில் பிறப்பவைப் பிறந்து
கொண்டிருக்கின்றன
மூப்படையாத உலகம் ஒவ்வொரு
நொடியும்
பிரசவத்திற்குத் தயார் நிலையில்
இருக்கிறது
*****
No comments:
Post a Comment