1 Jul 2022

தலைவரைப் பாடுவோம்

தலைவரைப் பாடுவோம்

சூரியரே இதயத்துக்கு வந்த சூரியரே

சந்திரரே பூமிக்கு வந்த சந்திரரே

உம் பேரையும் வாழ்க என்ற வார்த்தையையும் முழங்கி

பலம் பல பல கண்டோம்

உம் உரை கேட்டு

களம் பற்பல பற்பல கண்டோம்

கடல் போன்ற உன் உள்ளத்தில் நீந்துகின்ற

மீன்கள் எனப் பாடிச் சென்றோம்

ஓயாத கடலலைப் போல உழைப்பதாக

ஊர் முழுவதும் உரக்கச் சொன்னோம்

தடைகளை உடைப்பதில்

உன்னைப் புயல் என்றோம்

பகையைச் சிதைப்பதில்

உன்னை ஊழித்தீ என்றோம்

வாரி வழங்குவதில்

பாரியின் பிள்ளை என்றோம்

கொடுத்துச் சிவப்பதில் உன் கைகள்

செந்தாமரையோ செவ்வண்ண ரோஜாவோ

என மயங்கி நின்றோம்

இவ்வளவு எண்ணியும் முழங்கியும் பார்

இன்னும் வந்து சேரவில்லை பார்

ஒரு குவார்ட்டர் பிராந்தியும் பிரியாணியும்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...