அந்தக் காலத்தில் எல்லாம் இருந்தன
தூக்கம் வராத நாட்களில்
கும்பர்கண ஞாபகம் வந்து விடுகிறது
அன்ன ஆகாரம் இல்லாமல்
தூக்க மாத்திரை இல்லாமல்
சுழலும் மின்விசிறி இல்லாமல்
குளிர்சாதன வசதி இல்லாமல்
கொசுக்கடி புழுக்கம் கொரோனா
கடன் இன்ஸ்டால்மெண்ட் ரெகவரி
பிக்கல் பிடுங்கல் நினைவின்றி
ஆறு மாத காலம் உறங்குவது
சாதாரணமா
அந்தக் காலத்தில் எல்லாம்
அளவுக்கு அதிகமாகவே இருந்திருக்கிறது
சந்தோசம் மகிழ்ச்சி தூக்கம்
எல்லாம்
இன்னும் நிறைய எல்லாம் எல்லாம்
*****
No comments:
Post a Comment