தீர்த்த கரையினிலே சினிமாவின் தெற்கு மூலையிலே
டாட்டூ குத்தாதே
அழிக்க முடியாது என்றாய்
இதயத்திலிருந்து அழித்த பிறகு
டாட்டூ என்ன டாட்டூ
அட போ பைத்தியமே
ஆயிரம் டாட்டூ குத்தி
ஆயிரத்தையும் அழித்தால்
பரணி பாடலாம் தெரியுமோ
*
நானென்றால் சமந்தாவைப் பிரிந்திருக்க
மாட்டேன்
நாக சைதன்யா பிரிந்து விட்டார்
பிரிவில் நிம்மதியும் அமைதியும்
தேடுபவர்கள்
முன்பு சேர்வதில் சந்தோஷத்தைக்
கண்டவர்கள்
*
வாழ்க்கையை எட்டு எட்டாகப்
பிரித்துக் கொள்ளச் சொல்வார் வைரமுத்து
எட்டாம் வாய்பாடு தெரிந்தவர்கள்
அப்படியே பிரித்துக் கொள்ளலாம்
தெரியாதவர்கள்
ஒவ்வொரு எட்டிலும் ஒரு அரையைக்
குறைத்துக் குறைத்துப் பிரித்துக் கொள்ளலாம்
*
பார்த்திபன் வித்தியாச வித்தியாசமாகப்
படம் எடுக்கிறார்
நாம் வித்தியாசங்களைக் கண்டு
கொள்ளாமல்
மசாலாவைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும்
மக்கள்
கொஞ்சம் வித்தியாசமான மசாலா
கொடுங்கள் பார்த்திபன்
நன்றாகச் சாப்பிடுவார்கள்
நம் மக்கள்
உள்ளே வெளியே என்று அலைவார்கள்
*****
No comments:
Post a Comment