10 Jun 2022

வகுப்பில் இரண்டு காளைகள்

வகுப்பில் இரண்டு காளைகள்

ஒரு கேள்வியின் பதில் ரொம்ப பெரிதாக இருந்தால்

சார் பரீட்சைக்கு இந்தக் கேள்வி வருமா?

சாரின் பதில் :

(நமக்கேன் வம்பு என்ற நனைவிலி மனதின் பிரக்ஞையோடு)

படிச்சிக்கோ வந்தாலும் வரும்.

உஷாராக இல்லாமல் இருக்க முடியுமா?

பரீட்சையில் பக்கத்தில் இருக்கப்போகும் பிரிய நண்பனிடம்

இந்தக் கேள்வி பரீட்சைக்கு வந்தாலும் வருமாம்.

நீயிதைப் படிச்சு வெச்சுக்கோ.

நான் இதைப் படிச்சு வெச்சுக்கிறேன்.

ஷேர் பண்ணிக்கிடலாம்.

நண்பனின் பதில் :

நாம்ம கேள்விய மாத்திக்கிடலாமாடா?

(அடப் பாவி சின்ன பதில்ங்றது கண்டுபிடிச்சிட்டான் போல)

என்னைய நம்ப மாட்டேங்றே இல்ல.

அதுக்கில்லடா நீ படிச்ச கேள்வி பரீட்சைக்கு வந்து அதெ நீயெனக்குக் காட்டாம விட்டுட்டேன்னா?

அப்போ நீ படிச்ச கேள்வி பரீட்சைக்கு வந்து அதெ நீயெனக்குக் காட்டாம விட்டுட்டேன்னா?

எதுக்குப் பிரச்சனை? ரெண்டு கேள்வியையும் ரெண்டு பேரும் படிச்சிடுவோம்.

உனக்கொண்ணு தெரியுமா?

சொல்லுடா நண்பா.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு.

புரியலையேடா.

அனைவருக்கும் தாழ்வுடா மடையா.

காப்பி அடிச்சுக்கப் போறது நாம்ம ரெண்டு பேருதான்டா.

அதெ விடு. டீலா நோ டீலா?

எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு எனக்குத் தெரியாம நீ எல்லார்கிட்டேயும் சீக்ரெட் டீலிங் வெச்சிருக்கியோன்னு. அதான் அனைவருக்கும் தாழ்வுன்னு பொதுவா சொல்றே.

போடா இவனே.

நீயும் போடா இவனே.

உன்னால முடிஞ்சதெ நீ படிச்சுக்கோ.

என்னால முடிஞ்சதே நான் படிச்சுக்கிறேன்.

நம்ம ரெண்டு பேராலயும் முடியாததெ வேற யாரையாவது வெச்சுப் பாத்துக்கிடலாம். சத்தியமா உன்னை வெச்சு நானோ, என்னை வெச்சு நீயோ வேணாம்.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...