வாய்மையும் பொய்மையும் இடத்து…
ஏங்க இங்க வாங்களேன்.
வந்துட்டேன் சொல்லு.
இந்தப் புடவை எப்படி இருக்கு?
பச்சையாத்தான் இருக்கு.
ச்சீ போங்க அந்தாண்ட.
இப்போ எதுக்கு இங்க வாங்களேன்னு சொன்னே?
எதுக்கோ சொன்னேன். இனுமே கூப்பிட்டாலும் வாராதீங்க.
கூப்புட்டா எப்படி வராம இருக்க முடியும்?
அதான் சொல்லியாச்சே வாராதீங்கன்னு.
நீ கூப்புடாம இருந்துக்கலாமே.
ஐயோ சாமி. இனுமே கூப்புடவே மாட்டேன்.
ஐயோ சொல்ல மறந்துட்டேன் பாரு. இந்தப் புடவை உனக்கு சூப்பரா இருக்கு.
அப்படியா. கிட்டக்க வாங்களேன்.
கூப்புடவே மாட்டேன்னீயே.
பிகு பண்ணாம வாங்க.
கூப்பிட்டா வராதேன்னுட்டீயே.
ஆமாஞ் சொன்னேன். அது அப்போ. இது இப்போ.
சொல்லு.
நிஜமாவே நல்லா இருக்கா?
நிஜந்தான். நீதான் புளுகு மூட்டைன்னு திட்டுறே.
இது மாதிரி நிஜத்தைப் பேசுனா யாரு உங்களைப் புளுகு மூட்டைன்னு
திட்டப் போறா?
இனுமே நிஜத்தையே பேசுறேன்பா. நிஜத்தோட சக்தியை இன்னிக்குத்தான்
புரிஞ்சிக்கிட்டேன்.
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க பொய் சொன்ன வாய்க்குப் போஜனம்
கிட்டாதுன்னு.
சத்தியம்டா செல்லம். நூத்துக்கு இருநூறு சதவீதம் சத்யம்.
சத்திய மேவ ஜயதே.
*****
No comments:
Post a Comment