6 Jun 2022

குறிப்புகளைப் பயன்படுத்தி எழுதும் முறைகள்

குறிப்புகளைப் பயன்படுத்தி எழுதும் முறைகள்

            சார் நீங்க எப்படி எழுதுறீங்க? இந்தக் கேள்வியைக் கேட்காத வாசகர்கள் கிடையாது. கையால்தான் என்று சொல்ல முடியாது. மேலும் அது ஒரு மொக்கை ஜோக்கும் வேறு. நான் நேரடியாக டைப்பிக்கின்ற ஆள்.

            ஏன் என்றால் என் எழுத்து அப்படி. படிக்கின்ற காலங்களில் எல்லாம் புரியும்படிதான் அழகாக எழுதியிருக்கிறேன். எழுத்தாளர் ஆனதும் இப்படி ஒரு மாற்றம் நிகழ்ந்து விட்டது. எழுத்துலகம் சோகமான நாள் அது.

            நான் எழுதும் எழுத்து எனக்கே புரியவில்லை என்றால் எப்படி இருக்கும் சொல்லுங்கள். யோசித்துப் பார்த்து பார்த்து நம்மை போன்ற ஆட்கள் டைப்பித்துக் கொள்வதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

            சார் எழுதும் போது குறிப்புகளைப் பயன்படுத்துவீர்களா என்கிறார்கள். குறிப்புகளைப் பயன்படுத்தாமலா? நிறைய குறிப்புகள் என் வசம் இருக்கும். நான் எடுத்த குறிப்புகள், யார் யாரோ எடுத்த குறிப்புகள் என்று ஏகப்பட்டன.

            அந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி எப்படி எழுதுறீங்க சார் என்றும் கேட்கிறார்கள். நான் ஆய்வாளன் அல்லவே. அதனால் அந்தக் குறிப்புகளை அப்படியே டிட்டோ போட்டு பயன்டுத்த முடியாது.

            எனவே எல்லா குறிப்புகளையும் பயன்படுத்த முடியாது. ஒரு சில குறிப்புகளைப் பயன்படுத்தினால் பெரிய விசயம். அத்தனைக் குறிப்புகளிலும் எதனையும் பயன்படுத்தாமல் எழுதியதும் உண்டு. எப்போது எப்படிச் செய்கிறேன் என்பது எனக்கே புரியாத அனுபவம். எழுதுவதில் எவ்வளவோ அனுபவங்கள். அவ்வளவையும் சொன்னால் படிக்கின்ற உங்களுக்குப் பொறுமை இருக்குமா என்று யோசிக்கிறேன்.

            பொறுமையாகப் படிக்கிறேன் என்று உத்திரவாதம் தந்து இருபது மெயில்கள் வந்தால் கூட போதும் எழுத தயாராயிருக்கிறேன். அனுபவங்கள்தானே வாழ்க்கை. அந்த அனுபவங்களைச் சொல்வதால் நானென்ன குறைந்து போய் விடப் போகிறேன். என் அனுபவங்களால் தரமற்ற ஓர் எழுத்தாளர் கிடைத்தால் கூட போதுமானதுதான். ஆத்ம திருப்தி.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...