6 Jun 2022

காலங்கள் மாறுவதில்லை

காலங்கள் மாறுவதில்லை

            முன்பெல்லாம் அம்மா சிவாஜி, எம்.ஜி.ஆர்., சாவித்திரி என்று அறிய அவ்வளவு ஆர்வம் காட்டுவாளாம். பாட்டி சொல்லி அலுத்துக் கொள்வாள். அது ஒரு காலம்.

            இப்போதென்ன வாழ்கிறது?

            சீரியர் நடிகர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறாள். தெரியுமாடா சேதி ‘ஆசிர்வாத்’ சீரியல்ல நடிச்சிட்டு இருந்த ‘நமஸ்காரி’க்குக் கல்யாணம் ஆகி குழந்தை பொறந்தாச்சாமேயடா என்கிறாள்.

            இது ஒரு காலம். பாட்டியின் பெயரனாகிய நான் சொல்லி அலுத்துக் கொள்கிறேன். ஆக, இப்போதும் அதே காலம். மாறவேயில்லை. பாட்டி மட்டும் ரெஸ்ட் இன் பீஸில் இருக்கிறாள் அம்மாவின் ஆர்வங்களால் அலுப்போ சலிப்போ உறாமல்.

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...