ஒரு நாளில் இருபது மணி நேரம் உழைக்கிறேன்
எல்லாரும் புத்தகம் படிப்பதில்லை என்று வருத்தப்பட முடியாது.
என் ஆர்வம் இப்படி. அவர்கள் ஆர்வம் அப்படி.
என்னால் பத்து மணி நேரம் என்றாலும் நூலகத்தில் புத்தகங்களைத்
தேடித் தேடிப் படிக்க முடியும். என் மனைவிக்கு எத்தனை மணி நேரம் என்றாலும் நகைக் கடை
மற்றும் புடவைக் கடையில் தேடித் தேடி வாங்க முடியும்.
நான் நூலகப் படிப்பை முடித்து மண்டை காயத் தொடங்கும் நேரத்தில்
மனைவியுடன் சேர்ந்து கொள்வேன். நகைக்கடையின் ஏசி காய்ந்த மண்டையைக் குளு குளு ஆக்கி
விடும். எங்கள் ஊர் நூலகத்தில் ஏசி இல்லை. ஏசி டொனேட் செய்பவர்களுக்கு நான் வெளியிடப்
போகும் நூலில் பத்து பிரதிகள் அன்பளிப்பாக அனுப்ப தயாராக இருக்கிறேன்.
இப்படியாக நான் என்னுடைய தேடலுக்காகப் பத்து மணி நேரமும் மனைவியின்
தேடலுக்காகப் பத்து மணி நேரமும் ஒவ்வொரு நாளும் இருபது மணி நேரம் உழைக்கிறேன். என்னைப்
பார்ப்பவர்கள் என்னை ஓயாது உழைப்பவன் என்கிறார்கள். என்ன செய்வது? உழைக்காமல் வாழ முடியுமா?
*****
No comments:
Post a Comment