4 Jun 2022

அற்புத சுகமளிக்கும் தோஷம் ஜலதோஷம்

அற்புத சுகமளிக்கும் தோஷம் ஜலதோஷம்

(புதுக்கவிதை கால இலக்கியம் மற்றும் நிற்காமல் ஒழுகும் சளி கவிதையின் தொடர்ச்சி)

மனிதர்கள் தண்ணீர் இல்லையென்றால் வாழ முடியாதாமே

மூக்கிலிருந்து தண்ணீர் போல

சளி வழிந்தால் வாழ முடியுமோ

வாழ வேண்டுமே (1)

வாழ வேண்டுமே (2)

அதுதானே வாழ்க்கை எனப் பயந்து

வாழும் வரை போராட

போராடும் வரை வாழ

முந்நூறு

ஐநூறு

ஏன் ஆயிரம் செலவானாலும் பரவாயில்லை என்று

டாக்டரிடம் செல்கிறேன்

ஊசி போட்டு மாத்திரை தந்து

ஒரு வாரத்தில் குணப்படுத்துகிறேன் என்கிறார்

சரிதான் போ

காசுக்குப் பயந்து அப்படியே விட்டால்

ஏழு நாளில் சரியாகி விடும் என்கிறார்

ஒரு வாரத்தில் குணமாவதை

ஏன் ஏழு நாளைக்குத்

தள்ளிப் போட வேண்டும் என்று

ஊசியைக் குத்தினால்

ஊசியின் வலியோடு

கசப்பு மாத்திரைகளும் போனஸ் என்கிறார் டாக்டர்

கசப்பு மாத்திரைகள் என்றாலும் காசுதான்

என்பதில் குறியாக இருக்கிறார் மருந்து கடைக்காரர்

கூடுதல் காசு தந்தால் இனிப்பு மாத்திரைகள் தருவீரா என்றால்

சாக்லேட் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்

எனக்கென்னவோ

மாத்திரைக்கும் சாக்லேட்டுக்கும்

வித்தியாசம் தெரியாதது போல

இரண்டாலும் உள்ளுறுப்புகளுக்கு

ஏதோ ஒரு நாள் ஆபத்துதான்

அது கிடக்கட்டும்

அதெல்லாம் பார்த்தால்

ஆரம்பித்த மருந்து கம்பெனிகளையும்

சாக்லேட் கம்பெனிகளையும் என்ன செய்வது

இப்போதைக்கு

இந்த ஒரு வாரத்தை ஓட்டியாக வேண்டும்

அடுத்த வாரம் சளி ஓடி விடும்

நிம்மதியாக இருக்கலாம்

ஒரு வாரம் அவஸ்தைப்பட்டால்

அடுத்தடுத்த வாரங்கள் சுகம்தான்

அற்புத சுகமளிக்கும் தோஷம் ஜலதோஷம்தான்

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...