4 Jun 2022

சளியைப் பாடுவோம்! மனிதர்கள் வாழ புது கிரகங்களைத் தேடுவோம்!

சளியைப் பாடுவோம்! மனிதர்கள் வாழ புது கிரகங்களைத் தேடுவோம்!

(மறுமலர்ச்சி கால இலக்கியம் மற்றும் சளி கவிதையின் தொடர்ச்சி)

சளி பிடித்து விட்டால்

மூக்கு வற்றாத ஜீவ ஊற்றைப் போல இயங்குகிறது

மூக்கிற்குள் இவ்வளவு தண்ணீரா

என்று ஆச்சரியப்பட்டுப் போகிறேன்

பாலைவனத்தில் வாழும் மக்களுக்கும்

சளி பிடித்தால் இப்படித்தான்

மூக்கு ஜீவ நதியைப் போலப் பெருக்கெடுக்குமா

அடேங்கப்பா

மூக்கனைத்து ஊறும் சளியைப் போல

கற்றனைத்து ஊறும் அறிவோ

சளி பிடித்தவரை நிலவில் கொண்டு நிறுத்தினால்

நிலவு நீர்க்கோளம் ஆகி விடுமோ

சளி பிடித்த நேரமாகப் பார்த்து

ஆய்வாளர்கள் செவ்வாய் கிரகம் சென்றால்

தண்ணீர் இல்லாத கிரகத்தைத் தண்ணீரால் நிரப்பி விட முடியாதோ

இப்படி ஒவ்வொரு கிரகமாகச் சென்று

ஒவ்வொரு கிரகத்தையும் நீர்க்கோளமாக மாற்றினால்

மனிதர்கள் வசிக்க இன்னும் அதிக கிரகங்கள் கிடைக்காதோ

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...