22 Jun 2022

நடுவில் சில நாராசமான நாட்குறிப்பு பக்கங்கள்

நடுவில் சில நாராசமான நாட்குறிப்பு பக்கங்கள்

வீட்டின் மீதேறி

வீட்டைச் சுற்றிலும்

தண்ணீரை ஊற்றுவது போல

மழை

*

தண்ணீர் சளி

மஞ்சள் சளி

பச்சை சளி

பிறகு

அழுக்குச் சளி

அவ்வளவுதான் சளி

தெருவில் கண்ட இடமெல்லாம்

துப்ப வேண்டியதுதான்

*

டாக்டரிடம் கேளுங்கள்

இந்த ஆபரேஷனுக்காவது

இரண்டாயிரமாவது

குறைத்துக் கொள்ள முடியுமா

*

அஜித் என்றார்கள்

விஜய் என்றார்கள்

சூர்யா என்றார்கள்

நான் கிராபிக்ஸ் என்றேன்

*

அந்த நடிகரைப் பற்றி

ஒரே ஒரு மேசேஜ்தான் போட்டேன்

எவ்வளவு பாலோயர்கள்

பவர் ஆப் ஆக்டிங்

சோ மெனி ரியாக்டிங்

*

தமிழ்ப் படமொன்றில் நடிக்க அழைத்தார்கள்

தமிழ் பேச வேண்டுமே என்றேன்

அதெல்லாம் டப்பிங்கில் பார்த்துக் கொள்வார்கள் என்றார்கள்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...