5 Jun 2022

இப்படிக்கு மனிதர்கள்

இப்படிக்கு மனிதர்கள்

குறிப்புகளைக் கிழித்துப் போட்டால்தான் நிம்மதி.

எந்தக் குறிப்பில் எதையெதை குறித்து வைத்திருக்கிறேன்

என்று பயமாக இருக்கிறது.

*

நாக்கு கொஞ்சம் நீளம்

வேண்டுமானால்

கொஞ்சம் கட் செய்து

கறி சமைத்துக் கொள்

*

பாட்டிலுக்குள் மனிதன்

எப்படியடா புகுந்தாய்

என்றேன்

நான்தான் இறுக்க வைத்து

மூடி விட்டேன்

என்கிறான்

சரியாகத்தான்

சொல்கிறான்

அவனை அவனே

பாட்டிலுக்குள் வைத்து

மூடிக் கொள்ள முடியாதுதான்

பாட்டிலுக்குள் வைத்து

மூடும் வரை

என்னடா செய்து கொண்டிருந்தாய்

என்றேன்

நான் ஆவியாகி விட்டேனோ என

பயந்து போயிருந்தேன்

என்கிறான்

*

தோல்வியைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி முடியுமா என்ன?

ஜெயித்தால் மட்டும் என்ன சந்தோஷமாகவா இருக்கப் போகிறாய்?

*

உன் எழுத்தைப் படிப்பது

திக்கு தெரியாத காட்டில் அலைவதைப் போல

நான் உன் எழுத்தைப் படிப்பதில்லை

இனிமேல் எதையாவது எழுதி ஷேர் செய்யாதே

கஷ்டமாக இருக்கிறது

ஷேர் செய்ததைப் படிக்காமல் இருப்பது

*

ஆசை

தோசை

அப்பளம்

வடை

காம்பினேஷனே சரியில்லையே

சரி பரவாயில்லை

ஒரு பிளேட்

ஆசை கொண்டு வா

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...