21 Jun 2022

என்னவாகியிருக்கும் நினைத்துப் பாருங்கள்

என்னவாகியிருக்கும் நினைத்துப் பாருங்கள்

ஜோசியர்கள் மட்டும் இல்லையென்றால்

நினைத்துப் பார்க்கவே

பயமாக இருக்கிறது

உங்களுக்கு

எனக்கு

யாருக்கும்

ஜாதகமே எழுதியிருக்க மாட்டார்கள்

கல்யாண வயதில்

ஜாதகம் பார்க்க முடியாமல்

கல்யாணங்கள் இல்லாமல் போய்

நகைக்கடை

புடவைக்கடை

கல்யாண மண்டபங்களில் முதல் போட்டவர்கள்

திவால் ஆகியிருப்பார்கள்

எங்கள் ஊரில் இல்லாது போனாலும்

பக்கத்து பக்கத்து ஊரில்

இரண்டு மூன்று ஜோசியர்கள் இருப்பது

ஆறுதல் அளிக்கும் சங்கதி அன்றோ

அவர்களால் அன்றோ

ஊரில் இருப்போர்

கட்டைப் பிரம்மசாரிகளாக ஆகாமல்

சம்சாரிகளாகின்றோம்

குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுகின்றோம்

ஜோசியர்களுக்கு எப்போதும்

என் அநேக வந்தனங்கள்

என் கல்யாண தசையைச் சீக்கிரம் கணித்து

எனக்குக் கல்யாணம் செய்வித்த

அவர்கள் இல்லையென்றால்

எனக்கொரு மனைவி இருந்திருப்பாளோ

உங்களுக்கு உங்கள் மனைவியோ கணவரோ

பெற்றுத் தந்த ஜோசியருக்கு

எப்போதும் நன்றி சொல்லுங்கள்

கணவர் மனைவியர் ஆக்கித் தரும்

ஜோசியர்களுக்கு எல்லாரும் நன்றி சொல்வோம்

ஜோசியர்களே ஜோசியர்களே

எங்கள் நன்றிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்

ஜாதகம் பொருத்தம் பார்க்க

நூறு ரூபாய் மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...