பொருந்தாப் பொருத்தம்
நுட்ப ரீதியாகப் பார்த்தால்
அடுத்த கட்டம்
துணிச்சலான சமகாலச் சோதனைப்
பதிவு
கலை ஞானம் விசய ஞானம் இரண்டின்
கலவை
பிறகேன் பினாத்திக் கொண்டிருக்கிறாய்
செல்ல வேண்டிய இடத்திற்குச்
செல்
நீ ஏறும் இடத்திற்கு
எல்லாரும் வர வேண்டும் ஏன்
நினைக்கிறாய்
உனக்குப் பிடித்த இடத்தில்
இருக்க வேண்டும் என நீ நினைக்கிறாய்
அவர்களுக்குப் பிடித்த இடத்தில்
அவர்கள் இருக்க வேண்டும்
என நினைக்கிறார்கள்
உனது இடம் அவர்களுக்குப்
பிடித்தால்
அவர்களாக வருவார்கள்
அவரவர் ஆசைக்கு
அவரவர் வாழ்க்கையைச் செலுத்திக்
கொண்டிருக்கிறார்கள்
உனது ஆசைக்கு
உன் வாழ்க்கையைச் செலுத்திக்
கொண்டிருக்கிறாய்
உனது ஆசைதான் சிறந்தது என்றால்
பிறத்தியார் ஆசை மட்டமா என்ன
அவரவர் முகமூடியைக் கழற்றினால்தான்
தெரியும்
முகமூடிக்குப் பொருந்துவது
முகத்திற்குப் பொருந்தாது
என்பது
*****
No comments:
Post a Comment