19 Jun 2022

சின்னப் பயலே! சின்னப் பயலே! சேதி சொல்லடா!

சின்னப் பயலே! சின்னப் பயலே! சேதி சொல்லடா!

அம்மாவிடம் அடியும் வாங்கிக் கொள்கிறாய்

அவ்வபோது அடி வாங்கியதை மறந்து

சிரித்தும் பேசிக் கொள்கிறாய்

எப்படிக் கற்றாய்

இப்படி ஒரு சாமர்த்திய வித்தை

மேனேஜரைச் சமாளிக்க வேண்டும்

சொல்லடா சொல்லடா

சேதி சொல்லடா

சீக்கிரம் என் சின்னப் பயலே!

*

            டென்சன் ஆக வேண்டாம் என்று நினைத்தால்தான் ரொம்ப டென்சன் ஆகிறது. ஆதனால் மற்றும் ஆகையால் இனிமேல் டென்சன் ஆகலாம் என்றே நினைக்கிறேன்.

*

            என் தாத்தா என்னிடம் சொன்னது.

            அதை நான் உங்களிடம் சொல்கிறேன்.

            நீங்கள் மற்றவர்களிடம் சொல்லுங்கள்.

            இதைச் சொல்லி யாராவது அடிக்க வந்தால் எப்படியாவது ஓடித் தப்பிக் கொள்ளுங்கள். யாரோ சொன்ன செய்தியைச் சொல்லி விட்டு நாம் அடி வாங்கக் கூடாது பாருங்கள்.

            செய்தி இதுதான்.

            கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து, சாரி உங்கள் மொபைல் முன் உட்கார்ந்து ரெண்டு டொப் டொப். எல்லாம் முடிந்து விடுகிறது. பிறகேன் நீங்கள் மெனக்கெட்டு விவசாயம் செய்ய எல்லாம் விரும்பப் போகிறீர்கள்?

            என்று உங்கள் மொபைல் டொப் டொப்பால் சோறு கிடைக்காது என்று உணர்கிறீர்களோ அன்று அந்த டொப் டொப்பைத் தூக்கி எறிந்து விட்டு மொபைலாவது மண்ணாங்கட்டியாவது என்று ஏரைப் பிடிப்பீர்கள்.

            அப்போது கூட என் தாத்தா டிராக்டரைப் பிடிப்பீர்கள் என்று சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். பெரிய மனிதர்கள் எப்போதும் பெரிய மனிதர்கள்தான்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...