18 Jun 2022

திணை மயக்கம்

திணை மயக்கம்

இந்த நகரத்தில் நானிருக்கும் திணை

இதுவென்று சொல்ல இயலாது

குறிஞ்சியின் மலைமுகட்டைப் போலிருக்கும்

அபார்ட்மெண்டின் உச்சியில் வசிக்கிறேன்

முல்லையின் காடுகளைப் போலிருக்கும்

காங்கிரீட் வனங்களிடையே உலவுகிறேன்

தினம் விதைத்து முளைத்துக் கொண்டிருக்கும்

மருத நில வயல்களைப் போல

வளர்ந்தோடிக் கொண்டிருக்கும்

வாகனங்களிடையே ஊர்ந்து போகிறேன்

நெய்தல் நிலப் பரப்பில் வீசும்

கவிச்சி வாடையைப் போல

சாக்கடைக் கடல் புரளும்

அலைக்கரை பரப்பில் பயணிக்கிறேன்

செயின் பறிப்பு பீரோ புல்லிங்

சைபர் குற்றங்களைப் பார்க்கையில்

பாலைநிலப் பரப்பைக் கடக்கையில் எழும்

கள்வர்களின் அச்சத்தினூடே கடக்கிறேன்

*****

நன்றி : ஆனந்தவிகடன் இதழ் (22.06.2022) பக்கம் : 22

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...