15 May 2022

நல்லதுக்கும் நமக்கும் நாற்பது கி.மீ. தூரம்

நல்லதுக்கும் நமக்கும் நாற்பது கி.மீ. தூரம்

            செய்தித்தாள்களைத் திறந்தால் பாலியல் பலாத்காரங்களைத் திறப்பது போல இருக்கிறது. பதினாறு பக்கங்களில் ஏழெட்டுப் பக்கங்களுக்கு பாலியல் பலாத்காரங்களுக்குத் தனி பக்கங்கள் ஒதுக்குவார்களோ என்று ஒருவர் கேட்டார். இதற்கென எழுத படிக்க கற்றுக் கொண்டு செய்தித்தாள் படிப்பவர்கள் பெருகி இருக்கிறார்களா?        

செய்தித்தாள் பிரிவுகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற வேண்டுகோளோடு ‘மக்கள் அதைத்தான் விரும்புகிறார்கள்’ என்ற கருத்துச் சொல்லப்பட்டது. மக்கள் பாலியல் பலாத்காரங்களை விரும்புகிறார்களா என்ன? மக்கள் பாலியல் பலாத்காரங்களை விரும்பவில்லை. ஆனால் அதைப் பற்றிய செய்திகளை விரும்புகிறார்கள். அப்படியா என்ன? மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக பாலியல் பலாத்காரங்களை நிகழ்த்திச் செய்திகளை வெளியிடுவார்களோ?

மக்கள் விரும்புகிறார்கள் என்பதால் கொடுக்கிறார்கள். மக்கள் ஓசியில் பேப்பரை விரும்புகிறார்கள். கொடுப்பார்களா? கொடுக்க முடியுமா? அதை நடத்தவும் நிதி தேவைப்படுகிறது.

            நாட்டில் வேறு நல்ல விசயங்களே கிடைக்க மாட்டேன்கிறதே இந்த செய்தித்தாள்களுக்கு? மக்களே எதாவது நல்ல விசயங்கள் செய்யுங்கள். அதைச் செய்தால் பேப்பர்கான் போட மாட்டான் என்கிறார்கள் மக்கள்.

            ஆக மொத்தத்தில் நமக்கும் நல்லதுக்கும் தூரம் இருக்கிறது. நாம் நல்லதை நெருங்க வழியில்லையோ என்னவோ? நல்லதே தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். எல்லாரிடமும் கேட்டுப் பார்த்தாயிற்று. அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்கிறார்கள். வெறென்ன வழியிருக்கிறது. நீயே எங்களைக் கொஞ்சம் நெருங்கி வா.

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...