11 May 2022

எப்படி எழுதத் துவங்குவது?

எப்படி எழுதத் துவங்குவது?

            எதை சார் எழுதுவது?

            கதையா?

            கட்டுரையா?

            கவிதையா?

            நாவலா?

            வெண்பாவா?

            துணுக்குகளா?

            வாசகர் கடிதமா?

            தர்மஎமனிடம் கேளுங்கள் கேள்வி பதிலையா?

            கிசுகிசுவையா?

            நாடகத்தையா?

            பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு கடிதத்தையா?

            எதிர்வீட்டுக்காரர் மேல் பெட்டிஷனையா?

            விடுப்பு விண்ணப்பமா?

            மெமோவுக்கு விளக்கமா?

            பல் விழுந்ததற்குப் பாராட்டு தெரிவித்து நன்றி மடலா?

            கல்யாணப் பத்திரிகையா?

            மளிகை சாமான் ரோக்காவா?

            டெலிபோன் செல்போன் நம்பர்களா?

            பால்கணக்கா?

            பிள்ளைகளுக்கு ஹோம் ஒர்க்கா?

            எதை சார் எழுதுவது?

            ஓ இப்படி எழுதுவதற்கு நிறைய இருக்கிறதா? இவ்வளவு இருந்தால் எதைத்தான் எழுதுவீர்கள்?

            உங்களால் ஏன் எழுத முடியவில்லை என்பதற்குக் காரணம் புரிகிறது. இவ்வளவில் எதை எழுதுவது என்ற குழப்பமே உங்களை எழுத விடாமல் தடுக்கிறது. உங்களை எப்படியாவது எதையாவது எழுத வைத்தாக வேண்டும்.

            ஒரு நாலு பேருக்குக் கடன் கொடுங்கள். அதை எழுதி வைக்கவாவது ஒரு நாற்பது பக்க நோட்டுப் போட்டு எழுத ஆரம்பித்து விடுவீர்கள். எப்படியாவது எழுத துவங்கித்தான் ஆக வேண்டும் சார். அதை எப்படித் துவங்கினால் என்ன? இன்றே துவங்கி விடுங்கள்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...