13 May 2022

சிக்கன கதைகள் சில

சிக்கன கதைகள் சில

            ஒரு நாள் லீவ் கேட்டார் ஆனந்த கிருஷ்ணன். எதாவது முக்கிய வேலையா என்றேன். வீட்டுவேலைதான் என்றார்.

*

            ஒரு ரூபாய் கடன் தர மாட்டார் அண்ணாச்சி. நானே பேங்க்ல லோன் வாங்கி கடை வெச்சிருக்கேன் தம்பி என்பார் ஒவ்வொரு முறையும் மறக்காமல்.

*

            செய்யுறதான்னு புரியல. விடுறதான்னு புரியல. யாருங்க நீங்க எந்த ஊருன்னு கேக்குறதுக்குள்ள மறைந்து போனது வயலிலிருந்து புறப்பட்டு வந்த அந்த ஆன்மாவின் குரல்.

*

            ஒவ்வொரு மாதமும் ஒரு முறையோ இரு முறையோ முதியோர் இல்லம் போகிறேன். சேர்த்தாயிற்று. பார்த்தாக வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் மீன் தொட்டியில் இருக்கும் மீன்களின் நலத்தையே விசாரிக்கிறாள் அம்மா. அது அம்மாவை முதியோர் இல்லாம் அனுப்பும் நாளன்று வாங்கி வந்தது. நீ சௌக்கியமா இருக்கீயடா என்று ஒரு போதும் கேட்டதில்லை. பாசம் உதிர்ந்து விட்டது அம்மாவுக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

*

            ப்ளீஸ்டி ஒரு முத்தம் என்றேன். அடிக்கடி லிப்ஸ்டிக் வைக்க அலுப்பா இருக்கு என்றாள். அடிக்கடி முகம் கழுவ எனக்கு அலுப்பாக இருக்காதா?

*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...