14 May 2022

கொஞ்சம் பார்த்துச் செய்யுங்கள் கடவுளே!

கொஞ்சம் பார்த்துச் செய்யுங்கள் கடவுளே!

            “நல்லாத்தான் இருந்தார். பொட்டுன்னு போவார்ன்னு எதிர்பாக்கல.”

            “இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்.”

            “கொஞ்ச நாள்லாம் வேண்டியதில்ல. புள்ளைக்குக் கல்யாணம் பண்ணிப் பாத்துட்டுப் போயிருந்தார்ன்னா போதும்.”

            “பண்ணியிருந்திருக்கலாமே.”

            “பண்ணியிருந்திருக்கணும்.”

            “அது சரி. நீங்க என்ன பண்ணுவீங்க? இந்தக் காலத்துல பொண்ணு கிடைக்குறதுன்னா சாமனியமா?”

            “பொண்ணுல்லாம் கூட பிரச்சனையில்ல.”

            “அப்புடின்னா முடிச்சிருக்கலாமே.”

            “அவர் ஒத்துக்கணுமே.”

            “யாரு?”

            “அதாங்க அவரு. அவனே ஒரு பொண்ண பாத்து வெச்சிருந்தான்.”

            “அடடா. தங்கமா முடிச்சிருக்கலாமே.”

            “அவரு முடியாதுன்னுட்டார். அவரே பொண்ணப் பாத்து கட்டி வைப்பேன்னு பிடிவாதமா நின்னார்.”

            “சரி, அப்படியாவது முடிச்சிருக்கலாமே.”

            “அதுக்குள்ளதான் போய் சேர்ந்திட்டார்.”

            “பகவான் பாத்து வைப்பார். கலைப்படாதீங்க.”

            “அவரும் போய் சேந்துடப் போறாரோன்னு பயமா இருக்குங்க.”

            “பகவான் எப்படிங்க போய் சேர்வாரு?”

            “பகவான்னு அவனோட சித்தப்பாவத்தானே சொல்றீங்க?”

            “ஓ பகவானே. ஒம் பேர்லயே ஒருத்தரைப் படைச்சிருக்கீயே. கடவுள்ங்ற பேர்ல உங்க குடும்பத்துல யாரும் இல்லங்ற நம்பிக்கையில சொல்றேன். கடவுள் பாத்துச் செய்வாரு. நம்பிக்கையோட இருங்க.”

            “கொஞ்சம் சீக்கிரம் பாத்துச் செய்ய சொல்லுங்க.”

            ஓ மை கடவுளே. எங்கே இருக்கீங்க? உங்களப் பாத்துச் சொல்லணும். உங்க விசிட்டிங் கார்டு கூட என்கிட்டெ இல்ல. சீக்கிரம் கொஞ்சம் பாத்துச் செய்யுங்க.

*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...