நாம்ம பார்த்து எவன் சார் நல்லா இருந்திருக்கான்?
நேத்து பார்த்தப்ப கூட நல்லாத்தான்
சார் இருந்தார்.
நாம்ம நல்லவிதமாகப் பாத்து
எவன் சார் நல்லா இருந்திருக்கான்.
பொசுக்குன்னு போவார்ன்னு
எதிர்பாக்கல.
இது மாதிரி விசயங்கள்ல சொல்லிட்டுப்
போவ முடியுதா பாருங்க.
நல்ல மனுஷன் சாவுறது தெரியாம
போயிச் சேந்துட்டார்.
சாவுறது தெரிஞ்சா எல்லா மனுஷனும்
நல்ல மனுஷன் ஆயிடுவான் சார்.
எல்லாருக்கும் இப்படி சாவு
அமைஞ்சிடாது சார்.
அடப் பாவிகளா? மனுஷன் சாவதிலும்
இப்படியா பொறாமைப்படுவீயே.
எப்ப சார் எடுக்குறாங்க?
தெரிஞ்சிருந்தா அந்த நேரத்துக்கு
வந்து நின்னுட்டுப் போயிடலாம் பாருங்க.
சாவு வீட்டுல ரொம்ப நேரம்
நிக்க முடியாது பாருங்க சார்.
நீங்க ஒண்ணு சார். உக்கார்றதுக்கு
சேர்லாம் போட்டுருக்காங்க பாருங்க. பந்தலும் போட்டுருக்காங்கல்ல சார்.
இனுமேதான் சார் அந்தக் குடும்பத்துல
இருக்குறவங்க ரொம்ப தைரியமாக இருக்கணும்.
இத்தன நாளு பயந்துட்டுக்கிட்டு
இருந்ததெ நீங்க பாத்தீங்க.
என்னமோ போங்க சார். மனுஷன்
வாழ்க்கை நிலையில்ல.
யாராவது செத்தா இப்படில்லாம்
சொல்லத் தோணுது சார்.
அப்படித்தான் சார். உங்க
சாவுக்கும் யாராச்சும் அப்படிச் சொல்வாங்கன்னு நெனைச்சு வருத்தப்படாதீங்க.
அங்கேயிருந்து அழைப்பு வந்துட்டா
போயிச் சேர்ந்துதான் ஆவணும் சார்.
ஏதாச்சும் இன்டிமேஷன் வரும்ங்ளா?
நேத்துக்கு முன்னாடி வரைக்கும்
வெயில்ல என்னமா அலைஞ்சார் தெரியுங்களா சார்.
இப்போ கூலிங்கா பிரீசர்ல
படுத்திருக்கார் இல்ல. அங்கதான் ஆண்டவன் இருக்கான் சார்.
புள்ளை குட்டிகளுக்கு ஒரு
கல்யாணத்த பண்ணிப் பாத்துட்டுப் போய் சேர்ந்திருக்கலாம்.
ஒரு புள்ளைக்கு எட்டு வயசும்
இன்னொண்ணுக்கு பன்னெண்டும்தான் ஆவுது சார்.
அப்படிங்களா சேதி. இன்னும்
கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்.
இன்னும் கொஞ்ச வருஷம்ன்னு
சொன்னா கொறைஞ்சா போயிடுவீங்க. நாள்ன்னு சொல்றீங்க.
சாரி சார். வருஷம்தான் வருஷம்தான்.
வாய் தவறி சொல்லிப்பிட்டது. மன்னிச்சுக்குங்க.
அவருக்கு விதி அவ்வளவுதான்
சார்.
இருந்தாலும் ரொம்ப கம்மி
சார். இன்னும் கொஞ்சம் இருந்திருக்கணும்.
நல்ல மனுஷங்களுக்குல்லாம்
அப்படித்தான் சார்.
அவரை வுட நம்மளுக்கு எல்லாம்
வயசு கூடய்யா. நாமெல்லாம் கெட்ட மனுஷங்களா?
அட சாவு வூட்டுல சண்டைப்
போடாதீங்கப்பா. உங்க எழவு பெரிய எழவா இருக்கு.
ஓகே பிரண்ட்ஸ். நாம்ம எழவா
அதிகபடுத்திட்டதா அபிப்ராயப்படுறாங்க.
கொஞ்சமாச்சும் கொறைச்சா அவுங்களுக்குக்
கொஞ்சம் சௌரியந்தானே.
சரி கௌம்பிடலாம். இன்னொரு
துக்கம் தெற்கு வீதியில்ல இருக்கு.
சொல்லாமா கௌம்பணும் சார்.
அதை முன்னாடியே செஞ்சிருக்க
கூடாதா சார். அவங்களுக்குத் துக்கமே இல்லாம போயிரிந்திருக்கும்.
*****
No comments:
Post a Comment