காலக்கோட்டின் தீர்மானங்கள்
மலையைப் பார்த்து மலைப்பென்ன
கடலைப் பார்த்துக் களிப்பென்ன
மலை கடலாக இருந்த நாளில்
கடல் மலையாக இருந்த நாளில்
எதைப் பார்த்து மலைத்திருப்பாய்
எதைப் பார்த்துக் களித்திருப்பாய்
பிறவிப் பெருங்கடல் என்ற
உருவகமும்
முக்தித் தரும் மலை என்ற
பெருமையும்
முன்பொரு காலத்தில்
மாறி மாறி இருந்தவை
கடலில் விழுவதைப் போல
மலையில் ஏறுவதும்
சரிசமமாகிப் போகும்
பூலோக வாழ்வில்
காலக்கோட்டில் தீர்மானம்
ஆகின்றன
நம்மில் யார் கடலென்பதும்
யார் மலையென்பதும்
*****
No comments:
Post a Comment