பிள்ளை பேறுகள்
ஒரு நாள் விடாது
வாரத்தின் எழு நாளும்
பிள்ளை பிள்ளை என்றிருந்தார்
ஊரார் போற்ற உலகோர் மெச்ச
பிள்ளை வளர வேண்டுமென
சுகம் பல தொலைத்து
துயர் பல பொறுத்து
உச்சி முகந்து
உள்ளங்கையில் தாங்கி
உதவாக்கரைப் பள்ளிகள் வேண்டாமென்று
உயர் பள்ளியில் பாடம் செய்து
கடன் பல உடன் கொண்டு
பாடு பல பட்டு
பெருநிறுவன மிகை ஊதிய வேலையைப்
பிள்ளை எய்திய நாளில்
ஜென்ம சாபல்யம் பெற்றார்
இன்றென்னவோ
கை நடுங்க கால் ஒடுங்க
ஒரு வாய் சோற்றை உண்ணுவதற்குள்
ஒரு பானைச் சோற்றை இறைத்து
பார்க்க பிள்ளைகளின்றி
பரதேசிக்கும் துணையொரு பரதேசியிருக்க
துணைக்கொரு நாதியின்றி
அல்லாடுவது ஏனென்றால்
கிழட்டு மூதியைப் பார்த்துக்
கொண்டிருந்தால்
அவரவர் பிள்ளைக்கு
அவரவர் பிள்ளைகளைப் பார்க்க
வேண்டுமன்றோ
*****
No comments:
Post a Comment