21 Apr 2022

சலிக்காமல் காத்திருக்கும் தெய்வம்

சலிக்காமல் காத்திருக்கும் தெய்வம்

பெருஞ்சோற்றுப் படையலிட்டு

பீடியும் சாராயமும் கேட்பார்

ஊர் கூடி குலவையிடும்

ஒரு நாளில் முண்டியடித்து முன்சென்றால்

முழுதரிசனம் கிட்டும்

மற்ற மற்ற நாட்களில்

ஊர் கோடியில் தனித்திருந்து

பூசாரி வரும் வேளைக்காக

அலுக்காமல் சலிக்காமல் காத்திருப்பார்

குடி காக்கும் ஒண்டிப்புலி ஐயனார்

*****

No comments:

Post a Comment