தேய்ந்தழிந்துப் போன கால்கள்
பயிர்கள் காய்கின்ற வேளைகள்
மழை மேகங்களுக்கு உவப்பில்லை
போலும்
அறுவடைக் காலங்களை
அழையா விருந்தாளிகளாய் வந்து
நிறைக்கின்றன
மெலிந்த தேசங்களின் மேல்
வலிந்து படை நடத்தும் வல்லரசுகளைப்
போல
நடந்து கொள்ளும் அவற்றை
தார்ப்பலீன் படுதாக்களோடு
எதிர்கொள்ளும்
விளைவிப்போர்கள்
விலைவீழ்ச்சி எனும் ஏவுகணைகள்
தாக்கும் போது
நிலைகுழைந்து போகிறார்கள்
ஆயுத வியாபாரிகளுக்குச் சந்தோம்
தரும்
போர்களைப் போலத்தான் ஆகி
விடுகிறது
நனைந்தவற்றைக் குறைந்த விலையில்
கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கும்
தலைகீழாக இயங்கும் உலக விதிகள்
சூதும் வாதும் அறியாத விதைப்போரை
சூதாட்ட மழையில் சிக்கச்
செய்து
சூதாட்ட வியாபாரிகளிடம் வசமாய்
மாட்டி விட்டுப் போகின்றன
போன வருடம் போல்
இந்த வருடம் கைவிடாது என்ற
நம்பிக்கையில்
வழக்கம் போல் நடக்கத் தொடங்குகின்றன
தேய்ந்தழிந்துப் போன கால்கள்
*****
No comments:
Post a Comment