6 Apr 2022

அஞ்சி ஒடுங்கும் வாழ்வு

அஞ்சி ஒடுங்கும் வாழ்வு

நரிகளோடு பழகுவதில் பயமில்லை

புலிகளோடு பழகுவதிலும் பயமில்லை

சிங்கத்திடமும் சிறுத்தையிடமும்

பயம் கொள்ள ஏதுமில்லை

பாம்புகளிடமும் பூரான்களிடமும்

பழகுவதிலும் பயம் என்ன வேண்டிக் கிடக்கிறது

முதலைகள் வாய் திறக்கும் போதும்

திமிங்கிலங்கள் விழுங்க நினைக்கும் போது

பயப்படுவதற்கு ஏதுமில்லை

இரண்டாகப் பிளந்து பூமி உள்ளிழுத்துக் கொள்வதிலும்

விரிசல் விழுந்து வானம் தலையில் விழும் போதிலும்

காற்றில் பிண்டங்கள் கண்டம் கண்டங்களாகப்

பிய்த்து வீசப்படும் போதிலும்

பயப்பட ஒன்றுமில்லை

சுயநல மனிதர்களிடம் பழகும் போது மட்டும்

பயப்படாதிருக்க முடியுமோ

எந்த திசையினின்றும் எந்த மிருக குணத்தினின்றும்

எந்த வடிவத்தினின்றும் எப்படி வேண்டுமானாலும்

வந்து வந்துத் தாக்கக் கூடும்

சுயநலம் மிக்க மனிதர்களின் நாக்கும் நோக்கும்

அஞ்சித்தான் வாழ வேண்டியிருக்கிறது

அஞ்சாமல் வாழ்வதில் அர்த்தம் ஏதுமில்லை

பயப்பட பாக்கியம் செய்து கொடுத்தோருக்கு

நன்றி சொல்லி சொல்லி

பயந்தபடி வாழ்வதன்றி வேறொரு வழியுண்டோ

வாழ்க்கைத் தெருவில் சம்பவச் சந்துகளில்

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...