22 Apr 2022

இதுவில்லை உலகம்

இதுவில்லை உலகம்

காட்டுக்குள் அழைத்துச் சென்று

சிங்கத்தையோ புலியையோ

காட்ட முடியாமல்

உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் செல்கிறேன்

வீட்டுக்கருகிலோ குளக்கரையிலோ

பறவைகளைக் காட்ட முடியாமல்

சரணாலயங்களுக்கு அழைத்துச் செல்கிறேன்

நிறைந்தோடும் நதியில்

துள்ளியோடும் மீன்களைக் காட்ட முடியாமல்

கண்ணாடித் தொட்டிக்குள் வளர்பவைகளைக் காட்டுகிறேன்

புறம்போக்கு நிலங்களில் மண்டிக் கிடக்கும்

செடி கொடி மலர்களைக் காட்ட முடியாமல்

பூங்காக்களுக்கும் நர்சரிக்கும் அழைத்துச் செல்கிறேன்

பிள்ளைகளுக்குக் காட்டும் இதுதான் உலகம் என்பது

இதுவில்லை என்பதை எப்படிக் காட்டுவேன் நான்

*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...