3 Apr 2022

துண்டித்துக் கொள்வதும் தழுவிக் கொள்வதும்

துண்டித்துக் கொள்வதும் தழுவிக் கொள்வதும்

ஸ்டேட்டஸ் பார்க்காமல் போவது

வாழ்த்துகள் சொல்ல மறந்து விடுவது

இடையிடையே ஒரு செல்ல ஹாய் விடுபட்டுப் போவது

படங்கள் பதியும் போது

பூங்கொத்துகள் போடாமல் விடுவது

ஸோ ஸ்வீட்

குட் டே மை ஹார்ட்

வெரி இன்ட்ரெஸ்டிங்

வெற லெவல்

சம்திங் டிபரெண்ட்

மிராகுலஸ் என வார்த்தைகள் மறைந்து விடுவது

இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன

திடீர் அழைப்புகளில்

அழைப்புகளைத் திடீரெனத் துண்டித்துக் கொள்ள

மற்றபடி வேறெந்த காரணங்களும் இல்லை

எப்போது அழைத்தாலும்

அரவணைத்து தழுவிக் கொள்ளவும்

ஆறுதல் சொல்லவும்

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...