22 Apr 2022

இருப்பதைக் காட்டும் இந்த வாழ்வு

இருப்பதைக் காட்டும் இந்த வாழ்வு

விடுமுறை நாளில்

தியேட்டர் பீச் என்று சென்று

ஓய்வு கொள்ள முடியவில்லை

கோடை வாட்டும் பொழுதுகளில்

ஊட்டியோ கொடைக்கானலோ

வாசம் கொள்ள முடியவில்லை

கண்காட்சி பொருட்காட்சி என்று

ஊர் திரண்டு செல்லும் போது

சென்று திரள நேரம் வாய்ப்பதில்லை

கல்யாணம் கருமாதி சாவு

மஞ்சள் நீராட்டு வளைகாப்பு காதணி விழா என்று

ஓடிக் கொண்டிருக்கும் நதி போல ஓடுவதன்றி

தேங்கி நின்று ரசிக்கும் கடல் போல்

நின்று நிதானித்து நான்கு வார்த்தைகள் பேசும்

வாழ்க்கை வாய்க்கவில்லை

என்றாலும்

பெருங்கூட்டப் பேருந்தில்

சிறு பொழுது உட்கார இடம் கிடைக்கையில்

வழியும் வியர்வையைத் துடைத்தபடி

குளிரூட்டப்பட்ட கடையொன்றில் நுழைகையில்

பிள்ளைகள் கேட்பார்களென்று

சந்தைக்கடைத் தெருவில் தேடியலைந்து வாங்குகையில்

சாப்பிட்டு நான்கு நாட்கள் ஆகி விட்டதென்று

கையேந்துபவரிடம்

பத்து ரூபாயைக் கொடுத்து

அவர் சொல்லும் கேட்கும் பொழுதுகளில்

இல்லையென்று சொல்லாது

இல்லாதிருப்பது ஏதென்பதைக் காட்டுகிறது

இந்த வாழ்வு

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...