9 Apr 2022

அழகியசிங்கரின் ‘அசோகமித்ரனும் நானும்’

அழகியசிங்கரின் ‘அசோகமித்ரனும் நானும்’

            வாசகர்களுக்கு மட்டுமல்லாது எழுத்தாளர்களுக்கும் தவிர்க்க முடியாத ஆளுமை அசோமித்திரன். அசோகமித்திரனை அறிந்தவர்கள் மற்றும் அவரது படைப்புகளைப் படித்தவர்கள் அவரைப் பற்றி அதிகம் அறிய ஆசைப்படுவது இயல்பாகத் தவிர்க்க முடியாத ஒன்று.

            அசோகமித்திரனுடன் நெருங்கிப் பழகியவரும் அவரது படைப்புகளை ஆதர்சங்களாகக் கொண்டவருமான அழகியசிங்கர் அவருடனான உணர்வுப்பூர்வமான தருணங்களையும் அவரது படைப்புகளால் உண்டான தரிசனங்களையும் ‘அசோகமித்ரனும் நானும்’ என்ற நூலில் பகிர்ந்துள்ளார்.

            அந்தக் காலத்தில் இதழ்களில் வெளியான தொடர்களையும், கதைகளையும், கட்டுரைகளையும் நூலாக்குவது போல இந்தக் காலத்தில் அழகியசிங்கர் அசோகமித்ரன் பற்றி முகநூலில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். வாசிக்க வாசிக்க தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் சுவாரசியமான புத்தகமாகவும் கொணர்ந்துள்ளார். ஒரே மூச்சில் வாசித்து முடிக்கத் தூண்டும் புத்தகம் என்பதே இந்தப் புத்தகத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்ல போதுமானது என்று நினைக்கிறேன்.

            முகநூலில் அழகியசிங்கர் இந்த நூல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அசோகமித்திரனின் மீதுள்ள அளவற்ற ஈடுபாட்டால் அந்த நூலை வாங்கிப் படித்து பிறகுதான் எனக்கு வேறு வேலைகளில் கவனம் சென்றது.

            அசோகமித்ரன் படைப்புகளை வாசிக்க நினைப்போருக்கு நல்ல தூண்டுகோல்கள் இந்தப் புத்தகத்தில் நிறையவே இருக்கின்றன. அசோகமித்திரனை நோக்கி ஆற்றுப்படுத்தும் நூல் என்றும் இதைக் குறிப்பிடலாம்.

            அசோகமித்திரன் குறித்த நினைவலைகளில் ஒரு சிலவற்றை மீண்டும் மீண்டும் கூறியிருக்கும் ‘கூறியது கூறல்’ குறித்து அழகியசிங்கரே தன்னுரையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

            அசோகமித்திரனுடனான முதல் சந்திப்பை அழகியசிங்கர் பதிவு செய்யும் போது அழகியசிங்கர் மீது அளவற்ற அனுதாபம் வந்து விடுகிறது. அசோகமித்திரனை முதன் முதலில் பார்த்ததும் ‘நீங்கள் அசோகமித்திரன்தானே?’ என்கிறார் அழகியசிங்கர். எந்த ஒரு வாசகருக்கும் ஆதர்ச எழுத்தாளரைக் காணும் போது உண்டாகும் மனவெழுச்சியால் ஏற்படும் கேள்விதான் அது. அதை அசோகமித்திரன் எதிர்கொண்ட விதம் வித்தியாசமானது. அசோகமித்திரனின் மனநிலை அப்போது எப்படி இருந்ததோ? அவர் அப்போது எப்படிப்பட்ட மனக்கொந்தளிப்பில் இருந்தாரோ? ‘நான் யாராக இருந்தால் உங்களுக்கு என்ன?’ என்று பதிலளித்து விட்டு நகர்ந்து விடுகிறார். வேறு ஒரு வாசகர் என்றால் அதற்குப் பின் அசோகமித்திரனின் படைப்புகளைப் படிப்பதையே விட்டிருப்பார். அழகியசிங்கரின் அனுபவம் வேறாக இருப்பதை இந்தப் புத்தகம் காட்டுகிறது. அழகியசிங்கருக்கு எந்த ஒரு சூழலிலும் எந்த ஒரு நிலையிலும் அசோகமித்திரன் மீதான ஈர்ப்பு குறையவில்லை. மாறாக நாளாக நாளாக அந்த ஈர்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

            அசோகமித்திரனின் ஆளுமையை, அவரது படைப்புகளை வாசிக்கும் போது தவற விட்டு விடக் கூடாத அம்சங்களை இந்த நூலின் பல இடங்களில் கோடிட்டுக் காட்டுகிறார். சான்றுக்குச் சிலவற்றைச் சொல்ல முடியும்.

            அவரது ஆளுமையைப் பற்றிக் குறிப்பிடும் இடங்களில் அழகியசிங்கர் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்.

Ø அசோகமித்திரனின் எளிமை

Ø எளிமையில் நிறைந்திருக்கும் பூடகம்

Ø பிடிக்காததை மறைமுகமாகச் சொல்வது அல்லது சொல்லாமல் விடுவது

Ø 85 வயது வரையிலும் விடாமல் எழுதிக் கொண்டிருந்தது

Ø தள்ளாத வயதிலும் வாசிப்பையும் எழுத்தையும் சந்திப்புகளையும் தொடர்ந்து கொண்டிருந்தது

Ø சிறு சிறு விசயங்களுக்கும் நன்றியோடு இருந்தது

அசோகமித்திரனின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும் போது பின்வருவனவற்றை அழகிய சிங்கர் குறிப்பிடுகிறார்.

Ø அசோகமித்திரனின் சொற்சிக்கனம்

Ø கதைகளில் நழுவிப் போகிற தன்மை

Ø எளிமையான நடையில் உறைந்து போகும் வாழ்வு

Ø வாசிக்க வாசிக்க சலிக்காத நடை

அசோகமித்திரனின் படைப்புகளின் வாசிப்பனுபவத்தை முன்வைத்து சில கட்டுரைகளையும் அழகியசிங்கர் இந்த நூலில் வரைந்துள்ளார். அந்த அனுபவங்கள் அனைத்தும் அசோகமித்திரனின் படைப்புகளோடு ஒன்றிப் போன ரசானுபவங்கள்.

நூலில் சொல்லப்படும் விசயங்களோடு ஒப்பிடுகையில் தென்படும் எழுத்துப் பிழைகள் ஒரு பொருட்டல்ல என்றாலும் பிழைகள் (நானறிந்த வகையில்) குறித்த தகவலை வெளியிடுவது அவரது அடுத்த பதிப்பைச் செம்மையாக்க உதவும் என்று நம்புகிறேன்.

வ. எண்

பக்கம்

பத்தி

வரி

பிழை

திருத்தம்

1

5

1

2

தொகுதியில்

தொகுதியை

2

12

2

15

மேகமுள்

மோகமுள்

3

16

1

13

இருக்கும்ஷ

இருக்கும்

4

21

1

2

ஓரே

ஒரே

5

21

1

9

வருடம்

வருடத்துக்கு

6

32

3

12

கலைமகளில் அக்கதை

கலைமகள் அக்கதையை

7

44

2

3

என் என்

என்

8

47

3

5

ஒரு இதழ் கணையாழியில்

கணையாழியின் ஓர் இதழில்

9

50

1

5

எழுதவதை

எழுதுவதை

10

52

2

4

அவர்கள்

ஒரே வாக்கியத்தில் இரண்டு அவர்கள் வருவதால் இன்னொரு அவர்கள் கூடுதலாகத் தேவையில்லை

11

67

மேல்

தலைப்புக்கு மேல்

ட்

தேவையில்லாமல் இந்த எழுத்து உள்ளது

12

68

2

1

வீளை

வீணை

13

69

2

2

மியூசம்

மியூசியம்

14

73

6

1

சநம்பந்தமான

சம்பந்தமான

15

74

3

3

ஷளட்டிங்

ஷூட்டிங்

16

75

1

2

ஐசினிமாவில்

சினிமாவில்

17

75

1

4

டெம்பரரிதான்.ஹ

டெம்பரரிதான்

18

75

3

5

ஷளட்டிங்

ஷூட்டிங்

19

75

4

1

கே கோ

கே.கே.

20

79

11

1

ஜநீங்கள்

நீங்கள்

21

84

4

1

ஜஇரு

இரு

22

85

2

2

ஆயிரத்து

ஆயித்து

23

85

4

4

யமனா

யமுனா

24

85

6

1

ஜஎப்பாவோ

எப்பவோ

25

87

2

1

தொடர்ந்து

1.      தொடர்ந்து

26

92

4

1

மனிதான்

மனிதன்

27

96

1

2

அந்தரத்தை

அந்தரங்கத்தை

28

96

3

9

பாம்பாய்

பம்பாய்

            ஓர் உரையாடல் கட்டுரையில் கேள்வி கேட்பவர் என்பதைச் சுருக்கமாக கே.கே. என்று குறிப்பிடுகிறார் அழகியசிங்கர். அது ஜே.கே. என்பது போல ஒரு வித வாசிப்பு வழுவமைதியைச் சுகானுபவமாகத் தருகிறது எனக்கு. சமகால வாசகர்களைப் பின்னோக்கி ஓடும் நதியில் அழைத்துச் சென்று சமகாலத்திற்குத் திரும்பியிருக்கிறார் அழகியசிங்கர்.

*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...