5 Apr 2022

எழுத்தெனப்படுவது

எழுத்தெனப்படுவது

இங்க் பேனாவை உச்சி முகர்ந்து

பேசிக் கொண்டிருப்பவர்கள்

எழுத்தாணியில் உச்சி முகர்ந்து

எழுதியதை அறியாதவர்கள்

பால் பாயிண்ட் பேனாவில் எழுதுவதில்

என்ன பரவசம் இருக்க முடியும் என்பவர்கள்

தட்டச்சு செய்து பழக்கப்பட்டவர்கள்

தட்டச்சும் பெரிய பிராமதம் இல்லை என்பவர்கள்

குரல் வழி எழுதும் செயலியில் பழக்கப்பட்டவர்கள்

எதில் எழுதினால் என்ன

எழுதப்படுவதில் என்ன இருக்கிறது

எழுதப்படும் மனம் பிரதானம்

அன்றொரு நாள் மனதால் எழுதிய

அழகிய கவிதையை

ஆழ்மனதில் அமிழ்ந்த கதையை

உணர்ச்சிப் பொங்கிய ஒரு பத்தியை

எவ்வளவு முயன்றும்

மற்றொரு நாள் எழுத முடியவில்லை

எழுதப்படுவதில் என்ன இருக்கிறது

எழுதும் மனதில் இருக்கிறது எல்லாமும்

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...