5 Apr 2022

நட்சத்திரக் கணக்குகள்

நட்சத்திரக் கணக்குகள்

நேற்றுப் பார்த்த வானத்தினின்று

இன்று சில நட்சத்திரங்கள் குறைந்திருக்கின்றன

நாளை இன்னும் பல நட்சத்திரங்கள் தோன்றக்கூடும்

வேறு பல மறையக்கூடும்

நட்சத்திரக் கணிப்பின் ஊடே

வாழ்க்கையைக் கணிக்க முற்படும் காலக்கணிதர்

நிகழ்வுகள் சிலவற்றை உருவாக்கக் கூடும்

நிகழ்வுகள் சிலவற்றை மறைக்கக் கூடும்

உருவாக்கிச் சொல்லும் நிகழ்வுகளுக்கு ஏற்ப

நட்திரங்கள் தோன்றாமல் போகலாம்

மறைந்து விட்ட நிகழ்வுகளை வெளிக்காட்டுவது போல

நட்சத்திரங்கள் தோன்றக் கூடும்

வானில் நட்சத்திரங்களின் எண்ணிக்கை

அப்படியே இருக்குமோ

கூடிக் குறையுமோ

குறைந்து கூடுமோ

நட்சத்திரங்கள் தோன்றவுமில்லை மறையவும் இல்லை

நட்சத்திரங்கள் அப்படியே இருக்கின்றன

கண்ணுக்குத் தெரிபவற்றைக் கொண்டு

கணக்குகள் அமைகின்றன

*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...