3 Apr 2022

தேநீர்த் தவம்

தேநீர்த் தவம்

அலைந்தபடி இருக்கும் தெருநாய்

காகிதக் கோப்பையில் வைக்கும் தேநீரை

நாவின் நுனியில் தொட்டு

சூடு பார்க்கிறது

ஆற்றி வைக்கப்பட்ட தேநீர் என்று அறிந்த பின்

நாவைச் சுழற்றி சுழற்றி

நக்கிக் குடிக்கும் அதன் வேகத்தில்

பெரும்பசியின் அகோரம் தெரிகிறது

 முழுக்கோப்பையையும் காலி செய்த அதன் வேகத்தில்

இன்னொரு கோப்பை தேநீர் கிடைக்குமா என்ற

ஏக்கம் வெளிப்படுகிறது

மாஸ்டர் இன்னொரு டீ என்று ஒலிக்கும் குரலில்

நாய் என்ன புரிந்து கொண்டதோ

காலிக் கோப்பையை ஆவலுடன் பார்க்கத் தொடங்குகிறது

*****

நன்றி : ஆனந்த விகடன் (06.04.2022)

*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...