17 Apr 2022

மனக்கடலின் பாக்கியவான்

மனக்கடலின் பாக்கியவான்

கடல் ஓயாது அலைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது

வானும் நிலாவின் ஒளியை அனுப்பிக் கொண்டிருக்கிறது

ஒளி ஓய்ந்தாலும் ஒலி ஓயாது போலும்

அமாவாசை நாளில்காணாத நிலவொளிக்கும் சேர்த்து

கடல் அலைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது

அலைவுறும் மனதுக்கு அலைவுறும் கடல்

அமைதியைத் தந்தபடி இருக்கிறது

கரையைத் தொடுவதும் விலகுவதுமாக

மாறி மாறி இயங்கும் அலைகள்

காலந்தோறும் கரையோடுதான் இருக்கின்றன

காவலர் என்னவோ

நள்ளிரவு மணி பனிரெண்டைத் தாண்டினால்

போ போ என்றும்

கிளம்பு கிளம்பு என்றும் விரட்டுவதில்

விலகுவதும் விரட்டிய பின் வந்து சேர்வதும்

கடலலைகள் போலத்தான் மனவலைகளும்

தினம் தினம் வந்துப் பார்த்து விட்டுப் போகும்

தூரத்தில் கடல் அமையப்பெற்றவர்

பாக்கியவான் அன்றோ மனக்கடலே

*****

No comments:

Post a Comment