சுழலும் அன்பு
அத்தனை அன்பையும் கொட்டித்தான்
வளர்க்கப்படுகின்றன
கசாப்பு கடைகளுக்குச் செல்லும்
ஆடுகள்
ஆடுகள் மட்டும் என்னவாம்
மரக்கன்றுகளை மேய்ந்து விட்டு
மர நிழலில் ஓய்வெடுத்துக்
கொண்டிருக்கின்றன
மரங்கள் மட்டும் என்னவாம்
வெட்டியவர் வீட்டில் முளை
விட
விதைகளை விட்டுச் செல்கின்றன
விதைகள் மட்டும் என்னவாம்
ஆடுகள் மேய மேய முளை விடுகின்றன
முளை விடுவது மட்டும் என்னவாம்
குட்டிப் போடாத ஆடுகளை நேசிக்குமா
என்ன
*****
No comments:
Post a Comment