9 Mar 2022

விபத்துக்குப் பின் நேரும் விபத்து

விபத்துக்குப் பின் நேரும் விபத்து

கொஞ்சம் மெதுவாகச் சென்றிருந்திருக்கலாம்

கொஞ்சம் காலம் தாழ்த்தியிருக்கலாம்

இரண்டும் நிகழாமல் போனதில்

இரண்டு வாகனங்களும் ஒன்றோடொன்று உரசி நின்றன

உரசுவதற்கு சில நொடிகளுக்கு முன்

மோதலை உணர்ந்த ஓட்டிகளில் ஒருவர்

வாகனம் வெடித்துச் சிதறுவதாய் நினைத்திருக்கலாம்

மற்றொருவர் நிதானமாய் உரசலைத் தவிர்க்க முனைந்திருக்கலாம்

உரசிய வாகனங்கள் கீறிச்சிட்டு நின்ற பின்

வாகன காயங்கள் பெரிதாகத் தெரியவில்லை யாருக்கும்

ஓட்டிகளில் ஒருவர் மாரடைப்பில்

வியர்த்து விதிர்விதிர்த்து அமர்ந்திருந்த போது

தவிர்க்கப்பட்ட விபத்திலிருந்து தப்பியவரை

அவசர அவசரமாய் ஏற்றியபடி

அவர் சென்ற வாகனத்தினும்

வேகமாய் விரைந்து கொண்டிருக்கிறது ஆம்புலன்ஸ்

விபத்துக் குறித்த கற்பனையை

ஒரு கணம் தவிர்த்திருக்கலாம்

அந்த ஓட்டிகளில் ஒருவர்

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...