பெரியவர்கள் போலில்லை குழந்தைகள்
விழாக்கள் எல்லாருக்கும்
மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது
சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும்
உண்டாகும் மகிழ்ச்சி
ஊற்றெடுக்கும் உற்சாகப் பிரவாகம்
விடுவெடுவென நுழையும் நடை
பயிலும் சிறுவன்
யாரையும் பொருட்படுத்துவதில்லை
இருக்கைகளின் கீழ் கிடக்கும்
சிறு சிறு பொருட்களைச் சேகரிக்கத்
தொடங்குகிறான்
அதையெல்லாம் பொறுக்கக் கூடாது
ஆய் என்கிற
தாயின் சொல்லுக்கு எதிர்ப்பினைக்
காட்டி அழுகிறான்
துறுதுறுவென விழிக்கும் சிறுமி
உதிர்ந்து கிடக்கும் பூக்களைச்
சேகரிக்கத் தொடங்குகிறாள்
அச்சச்சோ இதையெல்லாமா எடுப்பாங்க
என்கிற
தந்தையின் எதிர்வினைக்கு
எவ்வித வினையும் காட்டாது
பூக்களைப் பொறுக்குவதில்
மும்மரம் காட்டுகிறாள்
எவர் சொல்லையும் பொருட்படுத்தாது
அங்கும் இங்கும் சிறுவர்கள்
ஓடி மகிழ்கிறார்கள்
புதுப்புது விளையாட்டுகளைக்
கண்டுபிடித்து ஆடி மகிழ்கிறார்கள்
சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும்
விழாக்களின்றி வேறென்ன என்பதாக
குழந்தைகளின் விழாக்கள் அமர்க்களப்படுகின்றன
சந்தித்துக் கொண்டதால் முறுக்கிக்
கொள்வதைப் பற்றி
சிந்திக்கும் பெரியவர்கள்
போலில்லை குழந்தைகள்
*****
No comments:
Post a Comment