6 Mar 2022

எப்போதோ கேட்கும் பாடல்கள்

எப்போதோ கேட்கும் பாடல்கள்

இந்தப் பாடல்கள் தமக்குத் தாமே மெட்டமைத்துக் கொண்டவை

தமக்குத் தாமே வரிகளை உருவாக்கிக் கொண்டவை

சுதந்திரமான பாடல்கள்

யாருடைய கைத்தட்டல்களையும் எதிர்பார்க்காதவை

யாருடைய ரசனையையும் கோராதவை

காற்றின் போக்கில் கலந்து

காற்றோடு கரைந்து போகுபவை

தேடி அலைபவர்களின் காதுகளில்

அப்பாடல்கள் எப்போதோ ஒலிக்கின்றன

பாடல்கள் தரும் மயக்கத்தில்

லயித்து நிற்பவர்கள் அந்தக் கணத்தில் உறைந்து விடுகிறார்கள்

ஒரு கணத்தில் பிறந்து மறுகணத்தில் மறைந்து விடும் பாடல்கள்

திடீரெனப் பெய்யும் மழையில் நனைவதைப் போல

விழிப்போடு இருப்பவர்களால் கேட்கப்படுகிறது

விரும்புபவர்கள் காத்திருக்கலாம்

விருப்பங்களைத் தொலைத்தவர்கள்

கேட்கின்ற பாடல்களைக் கேட்டுக் கொண்டு

நகர்ந்து கொண்டிருக்கலாம்

அதற்காக மட்டுமல்லாது எதற்காகவும்

அந்தப் பாடல்கள் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...